மீண்டும் குற்றம்சாட்டும் கதாநாயகி

மீண்டும் குற்றம்சாட்டும் கதாநாயகி

1 mins read
230ebe2c-1b04-4e21-8594-1c99b75ff683
-

தனக்குரிய வாய்ப்புகளைச் சிலர் தடுப்பதாக மீண்டும் குமுறுகிறார் நடிகை பார்வதி மேனன். மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலை எதிர்த்த தால்தான் பலர் தம்மைப் புறக்கணிப்பதாகவும் அவர் ஏற்கெனவே கூறி இருந்தார். பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய மலையாள நடிகர் திலீப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று மோகன்லால் மீது குற்றம்சாட்டிய நடிகைகளில் பார்வதியும் ஒருவர்.

இதன் காரணமாகத் தமக்குக் கொலை மிரட்டலும் பாலியல் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து வருவதாக புலம்புகிறார் பார்வதி. "சில நடிகைகள் உச்சத்தில் இருக்கும்போது திடீரென காணாமல் போவார்கள். அதற்கான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதேபோல் என்னையும் காணாமல் போகவைக்க சிலர் முயற்சி செய்கின்றனர். "படவாய்ப்பு இல்லாவிட்டால் உணவகம் திறந்தாவது பிழைத்துக்கொள்வேன். அதற்காக அமைதியாக இருக்கமாட்டேன். பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்," என்கிறார் பார்வதி.