கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை

கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை

1 mins read
380daac7-fe1d-47f3-a1b6-a3c15df7af30
-

தமிழ், தெலுங்கு திரைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் வாங்கும் சம்பளம் கிட்டத்தட்ட ரூ.4 கோடி. அந்த அளவுக்கு சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான். கன்னடத் திரையுலகில் நடிகர், நடிகைகளின் சம்பளங்கள் லட்சங்களில்தான் பேசப்படுகிறது. 2010ஆம் ஆண்டு 'சூப்பர்' படத்தில் நடித்ததற்காக நயன்தாரா பெற்ற ரூ.50 லட்சம்தான் கன்னடத் திரையுலகில் ஒரு நடிகையின் அதிகபட்ச சம்பளமாக இருந்தது.

அதன்பின் ஏமி ஜாக்சன் 'தி வில்லன்' படத்திற்காகப் பெற்ற ரூ.55 லட்சம் கன்னட நடிகைகளை வியப்பில் ஆழ்த்தியது. தற்போது ராஷ்மிகாவின் மேல் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியுள்ளது. 2016ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படமான 'கிரிக் பார்ட்டி' படத்தில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தானா. முதல் படமே ரசிகர் களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து இரு கன்னடப் படங்களில் நடித்தார். நாக சவுரியா உடன் இணைந்து நடித்த 'சலோ' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தெலுங்கின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா நடித்த 'கீதா கோவிந்தம்' படத்திலும் அவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளிலும் பல படங்களைக் கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா தற்போது கன்னடத்தில் ஒப்பந்தமாகியுள்ள படம் 'பொகரு'.