பவன் கல்யாண்: திரையில் மட்டும் அரசியல் பேசக்கூடாது; நிஜத்திலும் பேசவேண்டும்

1 mins read
296d5981-d9c0-4a84-b7f7-d84cafb3ab8e
-

"திரையில் மட்டுமல்லாமல் தைரியமாக நிஜத்திலும் அரசியல் பேச வேண்டும்," என்று 'சர்கார்' படத்தில் நடித்த விஜய்யை நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். தமிழ்த் திரையின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் அரசியல் வசனங்கள் இருக்கும். அதேபோல்தான் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படத்திலும் இருந்தது. இந்தப் படத்தில் வழக்கத்துக்கு மாறாக படம் முழுவதுமே அரசியல் அலை வீசியது.

இந்நிலையில் தெலுங்குத் திரையின் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் அண்மையில் சென்னை யில் அளித்த பேட்டி ஒன்றில், "அரசியல் செய்ய வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கையில் செய்ய வேண்டும். படங்களில் ஆவேசமாகப் பேசி மக்களைத் திசை திருப்ப முயற்சி செய்வதால் எந்தப் பிரயோஜனமும் கிடை யாது. படங்களில் அரசியல் பேசுவது எனக்குப் பிடிக்காது. ஒன்றுமறியாத மக்களை முட்டா ளாக்கும். தைரியமிருந்தால் நேரடியாக மேடையில் அரசியல் பேசவேண்டும்," என்றார் பவன் கல்யாண். தெலுங்கு அரசியலில் நேரடி யாகத் தனது அரசியல் கருத்தைக் கூறி வருபவர் நடிகர் பவன் கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது.