'அட்டக்கத்தி' நந்திதாவை தமிழில் அதிகம் பார்க்க முடிவதில்லை. ஆனால் இதர தென்னிந்திய மொழிகளில் அசத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் அண்மைக்கால மாக இவர் நடித்து வரும் திகில் நிறைந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன. இவரை திகில் ராணி என்று ஊடகங்கள் குறிப்பிடும் அளவுக்கு இந்தப் படங்கள் பேசப்படுகின்றன. தற்போது தெலுங்கில் '7', கன்னடத்தில் 'அக் ஷரா', தமிழில் 'தேவி 2' என மூன்று மொழிப் படங்களில் மிரட்டுகிறார் நந்திதா. அதுவும் 'தேவி 2'வுக்காக மொரிஷியஸ் சென்று வந்தவர், பிரபுதேவாவுடன் அங்கு ஒரு டூயட்டும் ஆடி அசத்தியிருக்கிறார். அதன் பிறகு வாயைத் திறந்தாலே பிரபுதேவாவை பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறார். "அந்தளவுக்கு அவர் என்னைக் கவர்ந்துவிட்டார். அவரது அபாரத் திறமை மலைக்க வைக்கிறது. அவருடன் ஒரே ஒரு பாடலுக்காக ஆடி முடிப்பதற்குள் இடுப்பே ஒடிந்துவிடும் போலாகிவிட்டது. ஆனால் அந்தப் பாடல் எனக்கு ரசிகர்களிடம் பெரியளவில் பாராட்டுகளைப் பெற்றுத் தரும் என்பதை நினைக்கும்போதே உற்சாகமாக உள்ளது," என்கிறார் நந்திதா.
நந்திதாவை மிரள வைத்த பிரபுதேவா
1 mins read
-

