சில சிக்கல்களை சமாளித்து வெற்றிகரமாக வெளியீடு காண உள்ளது 'மாரி 2'. இந்தப் படத்தின் வசூல் நிச்சயம் திருப்திகரமாக இருக்கும் என நம்புகிறாராம் நாயகன் தனுஷ். முதல் பாகமான 'மாரி'யைப் பார்க்காதவர்களுக்கும் கூட எளி தில் புரியும் வகையில், எந்தவித குழப்பத்துக்கும் இடம் தராமல் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். முதல் பாகத்தைப் போலவே இதிலும் தனுஷின் கதாபாத்திரம் சற்றே வித்தியாசமாக உருவாக்கப் பட்டுள்ளதாம். கதைப்படி மாரி ரொம்ப நல்லவனும் இல்லை, அதே சமயம் கெட்டவனும் இல்லையாம். "இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை வெளியில் இருந்து பார்க்கும்போது மிக சாதாரணமாகத் தோன்றும். இதில் நடிப்பது ரொம்ப சுலபம் என் றும் சிலர் நினைக்கலாம். ஆனால், நடித்துப் பார்த்தால்தான் இந்தக் கதாபாத்திரத்தை சுமப்பதற்கான கஷ்டம் புரியும். "தனது யதார்த்தமான நடிப்பால் தனது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியுள்ளார் தனுஷ். இதற்கு முன்பே 'ஆடுகளம்', 'புதுப்பேட்டை', 'வடசென்னை' எனப் பல கனமான கதாபாத்திரங்களில் அனாயசமாக நடித்தவர் அவர்.
'ரசிகர்களுக்கு மாரியை நிச்சயம் பிடிக்கும்'
1 mins read
-

