விஜய் சேதுபதியின் ஆட்டத்தைக் கண்டு வியந்த சிங்கப்பூர் ரசிகர்கள்

திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி சிங்கப்பூரில் ரசிகர்களின் அன்பு மழை யில் நனைந்தார். டிசம்பர் 7ஆம் தேதி அன்று மலபார் நகைக்கடை கிளைத் திறப்புவிழாவுக்கு வந்திருந்த அவர் மாலையில் கேம்பல் லேனில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
விஜய் சேதுபதியின் வருகையை ஊடக் கங்களின் வழி தெரிந்துகொண்ட ஏராள மானோர் அவர் வருவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் முன்பிருந்தே கேம்பல் லேனில் காத்திருந்தனர்.
அவர் மேடை ஏறியதும் அங்கு கூடியிருந்தவர்கள் எழுப்பிய ஆனந்தக் கூச்சல் அடங்கச் சிறிது நேரம் பிடித்தது. தாம் ஒரு முன்னணி நடிகர் என்ற எந்த வோர் அலட்டலோ முகத்திற்கு செய்கை அழகூட்டும் அலங்காரமோ இன்றி ரசிகர்களிடம் கைகுலுக்கி மகிழ்ந்தார் அவர்.
திரையுலகில் முன்னணி வரிசைக்கு வந்திருக்கும் விஜய் சேதுபதி தாம் மேற்கொண்ட முதல் சிங்கப்பூர் பயணம் இது என்று கூறினார். வேலை நாளாக இருந்தபோதிலும் அவரைக் காண கிட்டத்தட்ட 500 பேர் அங்கு திரண் டிருந்தனர். அவர்களில் பலர் இளையர் கள்.
மேடையில் நடனமாடுமாறு ரசிகர்கள் கேட்டுக்கொண்டபோது முதலில் மறுத்த அவர் 'டசக்கு டசக்கு' என்னும் விக்ரம் வேதா திரைப்படப் பாடல் ஒலித்ததும் ஒருசில வினாடிகள் ஆடித் தம்மைக் காண வந்தோரை வியப்பில் ஆழ்த்தினார் அவர்.
'பேட்ட' படத்தில் ரஜினியோடு நடிப் பது பற்றியும் காதல் அனுபவம் பற்றியும் விஜய் சேதுபதியிடம் ரசிகர்கள் கேள்வி களைக் கேட்டனர். அத்தனைக்கும் நகைச் சுவை உணர்வுடன் அவர் பதிலளித்தார். பின்னர் மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார்.

செய்தி: எஸ்.வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!