நான் வித்தியாசமானவள் - நாயகி அபர்ணா

நான் வித்தியாசமானவள் - நாயகி அபர்ணா

1 mins read
ab7bc880-e354-4fc0-8015-aea8c7612a7a
-

வழக்கமான கதாநாயகிக்கான பாத்திரங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான கதா பாத்திரங்களைத் தேர்வுசெய்து நடிக்க விரும்பு வதாகச் சொல்கிறார் இளம் நாயகி அபர்ணா முரளி. மலையாளக் கரையோரத்தில் இருந்து கோடம்பாக்கத்தில் கால் பதித்துள்ள புது வரவு இவர். பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்கியுள்ள் 'சர்வம் தாளமயம்' படத்தில் இவர்தான் கதாநாயகி. இப்படத்துக்கான கதையை உருவாக்கிய போதே அபர்ணா தான் நாயகி என முடிவு செய்து விட்டராம் ராஜீவ்.

நான் துணிச்சலான கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமானவள் என்றும் கூறுகிறார்கள். அதற்காக நான் அத்தகைய பாத்திரங்களில் மட் டுமே நடிப்பேன் என்று சொல்வ தற்கில்லை. "ஒரு நடிகைக்கு அவர் விரும்பும் வேடங்கள் மட்டுமே அமையும் என்று சொல்லமுடியாது. அனைத்துவிதமான கதாபாத்தி ரங்களில் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும். "என்னைப் பொறுத்தவரை யில் வித்தியாசமான வேடங்களை விரும்புகிறேன். அதன் மூலம் வித்தியாச மானவளாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்," என்கிறார் அபர்ணா.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg