வில்லன் அவதாரம் எடுத்த ஸ்ரீகாந்த்

வில்லன் அவதாரம் எடுத்த ஸ்ரீகாந்த்

1 mins read
6ec152e4-305f-4898-b90f-aff750b18488
-

கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் இல்லை என்பதால் ஸ்ரீகாந்த் கவலைப்படுவதாக இல்லை. மாறாக வில்லன் வேடத்திலும் நடிக்க முன்வந் துள்ளார். அந்த வகையில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளாராம். மலையாளத்தில் பல படங்களைத் தயாரித்துள்ள ஹாசிம் மரிக்கர் என்பவரின் இயக்கத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இது முழுநீள திகில் படமாம். ரியாஸ் கான் நாயகனாக நடித்துள்ளார். "ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நல்ல கதைதான் அடிப்படை. இந்தப் படத்தில் அது இருக்கும். படத்தின் தலைப்பு மட்டுமே காதலுடன் தொடர்புகொண்டதாக இருக்குமே தவிர, படத்தில் காதல் குறித்து ஏதும் இருக்காது," என்கிறார் இயக்குநர் ஹாசின்.

இந்தப் படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது என்றும் சொல்லும் ஸ்ரீகாந்த், ரசிகர்களுக்கு இப்படம் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்கிறார். சொந்தப் படம் தயாரித்த வகையில் கடும் நஷ்டத்தை எதிர்கொண்ட போதிலும், நல்ல கதை அமைந்தால் தொடர்ந்து படம் தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார் ஸ்ரீகாந்த். குறிப்பாக இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு தர விரும்புகிறாராம்.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg