புகைப்பிடித்த ஹன்சிகா மீது வழக்கு

ஹன்சிகா நடிப்பில் இயக்குநர் ஜமீல் இயக்கி வரும் படம் ‘மஹா’. இந்தப் படத்தின் சுவரொட்டி அண்மையில் வெளியானது. அதில் ஹன்சிகா சாமியார்போல உட்கார்ந்திருக்கும் படம் வெளியாகியுள்ளது. பாமக கட்சியைச் சேர்ந்த ஜானகி ராமன் ‘மஹா’ படத்தின் சுவரொட்டிக்கு எதிராக ஹன்சிகா மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

தனது இயல்பான நடிப்பால் திரையில் தோன்றும் நம் வீட்டுப் பெண்ணைப் போன்று அனைவரின் மனதிலும் பதிந்துள்ள ஹன்சிகா தற்போது ‘மஹா’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ சுவரொட்டி வெளியானது.

அறிமுக இயக்குநர் ஜமீல் இத் திரைப்படத்தினை எழுதி இயக்கு கின்றார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அரங்கம் அமைத்துப் படமாக்கப்படும் எனவும் மீதமுள்ள காட்சிகள் மதுரையில் படமாக்கப்பட வுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி ‘மஹா’ திரைப்படத்தின் சுவரொட்டி சமூக வலைத்தளங்கள், நாளிதழ்களில் வெளியாயின. அந்த சுவரொட்டியில் நடிகை ஹன்சிகா இந்துக்களின் புனிதத்தலமான காசி கோயிலின் முன்னால் ஆரஞ்சு வண்ண உடையணிந்து, கழுத்தில் உருத்திராட்ச மாலை, காலில் காலணி அணிந்து வலது கையில் கஞ்சா புகைப்பது போன்ற ஒரு சுவரொட்டி வெளியாகி யுள்ளது.

அது இந்து மத உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவதாகவும் இளம் பெண்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் இருப்பதாகவும் கூறி நடிகை ஹன்சிகா, இயக்குநர் ஜலீல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாமக கட்சியைச் சேர்ந்த ஜானகி ராமன் வழக்குத் தொடுத்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்