பரியேறும் பெருமாள் உரிமத்தைப் பெற்றது விஜய் தொலைக்காட்சி

கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. நீலம் ‘புரொடக்சன்ஸ்’ சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பரியேறும் பெருமாளாக சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார். கதிர் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர். சாதியை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. படமும் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்