எனக்குப் பிடித்த நடிகை கஜோல்

எனக்குப் பிடித்த நடிகை கஜோல்

1 mins read
142f98b8-c745-460d-b761-e4721e82990b
-

'சூது கவ்வும்' படம் மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானவர் சஞ்சிதா ஷெட்டி. பல படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவருக்கு 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் ஸ்டைலும் பஞ்ச் வசனமும் மிகவும் பிடிக்குமாம். அவர் நடித்திருக்கும் 'பேட்ட' படத்தின் முதல் காட்சியைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார் சஞ்சிதா ஷெட்டி.

சஞ்சிதா ஷெட்டி தற்பொழுது நடிகர் பிரசாந் துக்கு ஜோடியாக 'ஜானி' என்னும் தமிழ் படத்தில் நடித்து அந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

"எனக்குப் பிடித்த நடிகை கஜோல். அவரின் கண் மிகவும் அழகாக இருக்கும். 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாட்டை கஜோலுக்காகவே திரும்பத் திரும்பப் பார்த்தேன். எனக்குப் பிடித்த வேடம் என்று ஒன்றும் இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் அனைத்து வேடங்களும் எனக்குப் பிடித்த வேடங்கள்தான். எனக்குப் பிடித்த கதாநாயகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்தான்," என்றார். இவர் நடித்திருக்கும் 'ஜானி' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. தியாகராஜன் கதை, திரைக்கதை, தயாரிப்பில் பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த் ராஜ், தேவ தர்‌ஷினி ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் இது.