சிம்புவின் குத்துப் பாடலுக்கு அமோக ஆதரவு

சிம்புவின் குத்துப் பாடலுக்கு அமோக ஆதரவு

1 mins read
60e1667d-91e8-4c82-8bc8-45b317c24319
-

நடிகர் சிம்பு பாடியுள்ள 'நான் ஒரு வார்த்தை சொன்னா உன் மதம் காலி' என்ற பாடல் இணையத் தளத்தில் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வலம் வருகிறது. சிம்புவுக்கு நடிப்பு மட்டுமின்றி நடனம், இசை ஆகியவற்றிலும் ஆர்வம் அதிகம் உள்ளவர். அதனால் அடிக்கடி இசை ஆல்பங்களை வெளியிடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, ரமேஷ் தமிழ் மணி கூட்டணியில் உருவாகியுள்ள 'பெரியார் குத்து' என்ற ஆல்பத்தை 'ரெபல் ஆடியோ' நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக இதற் கான பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. 'சாதிச்சவன் சாதியைக் கூகுளில் தேடாதவன். நான் ஒரு வார்த்தை சொன்னா உன் மதம் காலி' என்ற பாடல் வரிகளைக் கொண்டிருக்கும் பாடலில் பெரியார் அடிக்கடி பயன் படுத்திய 'வெங்காயம்' என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளது. அண்மையில் பெரியார் சிலை உடைப்பு சம்பவம் நடந்தது. அந்தச் சம்பவத்திற்கு எதிராக பல் வேறு போராட்டங்களைத் திராவிட கட்சிகள் மேற் கொண்டன. அதை மையப் படுத்தி இந்தப் பாடல் உருவாகியுள்ளது. முன்பு ப ண ம தி ப் பி ழ ப் பு குறித்தும் நடிகர் சிம்பு பாடல் பாடியது குறிப் பிடத்தக்கது. இந்தப் பாடல் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.