இந்தி இயக்குநர் ரோகித் மிட்டலை கரம்பிடித்த சுவேதா பாசு

இந்தி இயக்குநர் ரோகித் மிட்டலை கரம்பிடித்த சுவேதா பாசு

1 mins read
bc13f6b4-8782-465c-a5bc-a08bf25623ec
-

இந்தி திரையுலக இயக்குநரான ரோகித் மிட்டலை கைபிடித்துள்ளார் நடிகை சுவேதா பாசு. 'ரா ரா', 'ஒரு முத்தம் ஒரு யுத்தம்', 'மை', 'சந்தமாமா' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சுவேதா பாசு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். இடையில் திரை வாய்ப்புகள் குறைந்திருந்த நேரத்தில், பாலி யல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர், சில நாட்கள் மகளிர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார். தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று அவர் விளக்கம் அளித்த நிலையில், மீண்டும் திரை வாய்ப்புகள் தேடி வந்தன. இந்நிலையில் இவருக்கும் ரோகித் மிட்டலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, அண்மையில் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இருவரது திருமணம் புனே நகரில் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் இருவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.