'இந்தியன்-2' படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிப்பது தெரிந்த சங்கதி. அந்தப் படத்துக்காக இப் போதே அவர் மெனக்கெட ஆரம்பித்துவிட்டார் என்பது புதுத் தகவல். வேறொன்றுமில்லை, இப்படத்துக்காக வர்மக் கலையைக் கற்று வருகிறாராம் காஜல். 'இந்தியன்' முதல் பாகத்தில் வர்மக் கலை மூலம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் கமல். இந்த இரண்டாம் பாகத்தில் அதே வேலையைக் காஜல் செய்வார் போலிருக்கிறது. குறுகிய காலத்தில் வர்மக் கலையை மேலோட்டமாகக் கற்றுக் கொள்ளுங்கள் என்று இயக்குநர் சங்கர் படநாயகி காஜல் அகர் வாலுக்கு அறிவுறுத்தினாராம். இது தொடர்பான தகவலைத் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் காஜல். இதற்கிடையே எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சிவகுமார் ஆகிய மூவரின் கூட்டணியில் 'இந்தியன்' இரண்டாம் பாகத்துக்கான கதை தயாராகி வருகிறது.
வர்மக்கலை கற்றுக்கொள்ளும் காஜல்
1 mins read
-

