"பொது இடங்களில் புகைப்பது குற்றம் என அரசுத் தரப்பில் சொல்லிக்கொண்டிருக்க, ஒரு பெண் இப்படி புகைப்பது போன்ற படத்தை வெளி யிட்டு புகை பிடிப்பவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது போல் செய்திருப்பது சரியல்ல," என சமூக ஆர்வ லர்கள் அமலாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரளாவில் காட்டுப்பகுதிக்குள் செல்லும் அமலா பால், அங்கு லுங்கி அணிந்துகொண்டு கையில் மது பாட்டிலுடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
"லுங்கிக்குப் பிரபலமான இடத்தில் இருக்கிறேன். இங்கு ஒவ்வொருவரும் மீன் சாப்பிட்டபடி மது அருந்து கின்றனர். இன்று நன்கு குடிக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம் வாங்க," என அழைப்பு விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து அமலா பால் தான் புகைபிடிக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, "நான் புகைபிடிப்பதை ஊக்குவிக்கவில்லை. ஒரு ஹாலிவுட் ரசிகையின் கனவு நிறைவேறியுள்ளது. அனைத்து நட்சத்திரங்களிடமும் புகைபிடிக்கும் படமிருக்கும், இது என்னுடைய படம்," என்று பதிவிட்டுள்ளார். விளம்பரம் தேட அமலா இப்படி எல்லாம் செய்வதாக வலைத்தளவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வலைத்தள வாசிகள் பலரும் விஜயை மட்டும்தான் அன்புமணி ராமதாஸ் கண் டிப்பாரா? அமலா பாலை கண்டிக்கமாட்டாரா என்றும் வம்புக்கு இழுத்துவிட்டுள்ளனர்.

