அஜித் பட நாயகியாக இயக்குநரின் மகள் ஒப்பந்தம்

அஜித் பட நாயகியாக இயக்குநரின் மகள் ஒப்பந்தம்

1 mins read
dfe68c0c-2c97-45a4-a2e7-4b23e4eaa5ed
-

'விஸ்வாசம்' படத் தைத் தொடர்ந்து நடிகர் அஜித் இந்தியில் உருவான 'பிங்க்' படத்தின் மறுபதிப்பில் நடிக்க உள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் புகழ் பெற்ற இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி யுள்ளது. கல்யாணி 'ஹலோ' என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானாவர். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்தை வினோத் இயக்குகிறார். நீண்ட இடை வெளிக்குப் பின்னர் அஜித் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.