சில நேரங்களில் ஒரு சிலரது வாழ்க்கைப் பயணம் கரடுமுரடான வழித்தடங்களில் தொடர்ந்து நடத்திச்செல்லவே முடியாத அளவில் ரணவேதனைகளைத் தரும். அந்த சமயங்களில் எல்லாம் அடுத்தவர் கள் நீட்டும் உதவிக்கரத்தால் அவர்களின் பாதை சரியான வழித்தடத்துக்கு மாறும். இப்படித்தான் தனது முள்ளான வாழ்க்கைப் பாதையும் பூவாக மாற யுவன் உதவியதாக அவரைப் பாராட்டி உள்ளார் தனுஷ். தனுஷ் தயாரித்து, நடித்துள்ள 'மாரி 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடந்தது.
இவ்விழாவில் நடிகர்கள் தனுஷ், கிருஷ்ணா, நடிகைகள் சாய்பல்லவி, வர லெட்சுமி, படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பாலாஜி மோகன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல ரும் கலந்துகொண்டனர். விழாவில் தனுஷ் பேசியபோது, "முழுக்க முழுக்க காமெடி, மசாலா கலந்த 'மாரி 2' படத்தை குடும்பத்தோடு அனை வரும் சேர்ந்து ரசிக்கலாம். மக்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும். "எனது நிஜ வாழ்க்கையிலும் மாரி யாகவே வாழ்ந்து செல்ல ஆசைப்படுகி றேன். நம்மை வெறுப்பேற்றுபவர்களிடம் ஒருவர் இப்படித்தான் அதிரடியாக நடந்து கொள்ளவேண்டும். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்' படங்கள் மிகப்பெரிய வெற் றிப்படமாக அமைய இன்றளவும் சிறந்த இசையமைப்பாளராக உள்ள யுவனின் இசைதான் காரணம்.
மாரி 2' காட்சியில் குத்தாட்டக் கலைஞர்களுடன் மிரட்டிப்போடும் தனுஷ். படங்கள், செய்திகள்: தமிழகத் தகவல் சாதனம்