விஷால் பதவி விலகக் கூறி வலுக்கும் போராட்டம்

விஷால் பதவி விலகக் கூறி வலுக்கும் போராட்டம்

1 mins read
55f7e367-fdce-47ed-80c9-d3b3b56ec402
-

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்படத் தயா ரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை விட்டு விலகவேண்டும் என திடீரென்று போர்க்கொடி உயர்த்தி உள்ளனர் தயாரிப்பாளர்கள். பொதுக்குழுவுடன் எதுகுறித்தும் ஆலோசிக்காமல் தன் விருப்பத்துக்கு மனம்போன போக்கில் எந்த ஒரு முடிவை யும் விஷால் எடுத்து வருவதாகக் கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிக ராக உள்ள விஷால் நடிகர் சங்கத்தில் செயலாளர், தமிழ்த் திரைப்படத் தயாரிப் பாளர்கள் சங்கத் தலைவர் ஆகிய பதவி களை வகித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர்கள் சங்கத் தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் அதிருப்தி யில் இருந்து வந்தனர். இந்நிலையில் விஷால் தலைமையி லான நிர்வாகத்தைக் கண்டித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் நேற்று போராட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக சென்னை தி நகரில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவகத்திற்கு பூட்டு போட்டு, சாவியை அப்பகுதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல். அழகப்பன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "கடந்த இரு ஆண்டு களில் விஷால் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறை வேற்றவில்லை. சங்கத்திற்கான நிரந்தர வைப்புத் தொகை ரூ.7 கோடி எங்கே எனத் தெரியவில்லை.