இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தியா' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சாய் பல்லவி. அந்தப் படம் சொல்லிக்கொள்ளும்படி ஓட வில்லை என்றாலும் சாய் பல்லவிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவர் தற்பொழுது 'மாரி 2' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஆட்டோ ஓட்டுநர் வேடம். இந்தப் படம் இன்று வெளி யாகி இருக்கிறது. இதே நாளில் சாய் பல்லவி தெலுங்கில் நடித்துள்ள 'படி படி லெச்சு மனசு' என்ற படமும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏற்கெனவே சாய் பல்லவி நடித்த 'பிடா' என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில்தான் சாய் பல்லவி நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றன. அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் சாய் பல்லவி.
பொம்பள 'தல'க்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
1 mins read
-

