ரூ7.85 கோடி முறைகேடு; முதல்வரிடம் தற்காலிக குழு அமைக்க வலியுறுத்து

ரூ7.85 கோடி முறைகேடு; முதல்வரிடம் தற்காலிக குழு அமைக்க வலியுறுத்து

2 mins read
13805868-eb2c-4411-81d2-9c78f402a3cc
-

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரூ.7.85 கோடி அளவுக்கு முறை கேடு நடந்துள்ளதாகக் கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியிடம் புகார் மனு அளித்துள்ள பட அதிபர்கள், உடனடியாக தற் காலிக நிர்வாகக் குழுவை அமைத்து சங்கக் கணக்குகளைக் கேட்கவேண்டும் என்று வலி யுறுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங் கத் தலைவர் பதவியை விட்டு விலகவேண்டும் என தயாரிப்பாளர் கள் போர்க்கொடி உயர்த்தினர். இதைத் தொடர்ந்து தயாரிப் பாளர் சங்க அலுவலகத்தில் போட்டிருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்ததன் தொடர்பில் விஷால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பழனி சாமியைத் தமிழ்ப்படத் தயாரிப் பாளர்கள் பாரதிராஜா, ஏ.எல். அழ கப்பன், தியாகராஜன் உள்ளிட் டோர் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில், "1,300 உறுப்பினர் களைக் கொண்ட சங்கத்தில் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு தலைவராக விஷால் பொறுப்பேற் றார். அவர் தலைமையிலான நிர் வாகம் முறையாக செயல்பட வில்லை. இதனால் சங்கத்தின் எதிர்கால நலன் கேள்விக்குறியாகி உள்ளது. "பொதுக் குழுவின் அங்கீகாரம் பெறாமல் கொள்கை முடிவு எடுக் கப்படுகிறது. கடந்த சங்க நிர் வாகம் விட்டுச்சென்ற காப்பு நிதி யான ரூ.7.85 கோடி தொகை பொதுக்குழுவின் ஒப்புதல் பெறா மல் செலவு செய்யப்பட்டுள்ளது.

"சங்க நிர்வாகத்தை முறைப் படுத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தற்காலிக நிர்வாகக் குழு அமைத்து சங்கக் கணக்குகளைக் கேட்கவேண்டும். 4 மாதங்களுக்குள் சங்கத் தேர்தலை நடத்தவேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது. "நான் செய்யாத குற்றத்துக்கு என்னைக் கைது செய்துள்ளனர். ஜே.கே.ரித்தீஷ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினரே கிடை யாது. பூட்டு போட்ட கிஷோர் என்பவரும் உறுப்பினர் இல்லை.

ஆனால் அவர்கள் மீது நட வடிக்கை இல்லை. உறுப்பினராக இருக்கும் எங்களைப் பூட்டைத் திறந்ததற்கு கைது செய்துள்ளனர். நல்லது செய்வதற்கு பெயர் முறை கேடு என்றால் அதை நான் ஏற்கிறேன்," என்றார் விஷால்.