'சாய் பல்லவிதான் படத்தின் நங்கூரம்'

'சாய் பல்லவிதான் படத்தின் நங்கூரம்'

1 mins read
63f0f5ce-bd6a-4b6b-ace8-8b906f41d5c8
-

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 'மாரி 2' படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'மாரி 2', 'சண்டக் கோழி 2', 'சர்கார்' ஆகிய படங்களில் வில்லியாக நடித்த வரலட்சுமி தனது அருமையான நடிப்பால் நாயகி கீர்த்தி சுரேஷை ஓரங்கட்டிவிட்டு அனைவரையும் தன்னைப் பற்றியே பேச வைத்தார். இந்நிலையில் 'மாரி 2' படத்திலும் அப்படி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரலட்சுமி போன்றே தனது நடிப்பால் தன்னைப் பற்றி பேச வைத்தவர் சாய் பல்லவி. அதனால் 'மாரி 2' படத்தில் சாய் பல்லவிக்கும் வரலட்சுமிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் பற்றி தனுஷ் கூறுகையில், "இந்தப் படம் குழந்தைகள் பார்த்து மகிழும் படம். படத்திற்கு சாய் பல்லவிதான் நங்கூரம். எனது வாழ்க்கையில் யாரெல்லாம் என்னைச் சிரமத்துக்கு உள்ளாக்கி னார்களோ அவர்களை மனதில் வைத்துக்கொண்டு 'மாரி' வேடத்தில் நடித்து அவர்களை வெளுத்துக்கட்டுவேன். தம்பி சிவகார்த்திகேயன், நண்பர் சேது (விஜய் சேதுபதி) இருவரின் படங்களும் 'மாரி 2' படத்துடன் திரைக்கு வந்திருக்கின்றன. எல்லோருக்கும் லாபம் கிடைக்க வேண்டுகிறேன்," என்றார்.