எல்லாரையும்விட நான் ஒரு வித்தியாச மான விளையாட்டுப் பறவை என்று சொல்கிறார் காயத்ரி சங்கர். காயத்ரியை விஜய் சேதுபதியின் ஆஸ்தான நாயகி என்றே சொல்லலாம். இதுவரையில் அவர் நடித்திருக்கும் 10 படங்களில் ஆறு படங்களில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்துள்ளார். "விளையாட்டுதான் என் உயிர் மூச்சு. விளையாடாமல் என்னால் இருக்கவே முடியாது. 'அல்டிமேட் ஃபிரிஸ்பீ' என்றொரு விளை யாட்டு. ஹாக்கி, காற்பந்து மாதிரிதான். ஆனால் இந்த விளையாட்டில் பந்துக்குப் பதி லாக ஒரு தட்டு இருக்கும்.
அதை வீசி எறிந்து விளையாடு வது மாதிரியான மிகவும் சுவா ரசியமான விளையாட்டு அது. அதற்கான முறையான பயிற்சி களுடன் அனைத்துலக அள வில் போட்டிகளில் கலந்து கொண்டேன். "சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் நடந்த போட்டியிலும் கலந்துகொண் டேன். இப்போது கபடி விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறேன். இப்படி பல விளையாட்டு நடவடிக்கைகளில் ஆர்வத் துடன் ஈடுபடுகிறேன்.
"நம்மை எப்போதுமே குதூ கலமாக வைக்க உதவுவது விளையாட்டுதான். நமது உடல் கனகச்சிதமாக, உடற்கட்டுடன் இருப்ப தற்கு உடற்பயிற்சி செய் வதைவிடவும் விளை யாட்டுகளில் கவனம் செலுத்தினாலே நாம் முழுமையாக உடற்கட் டுடன் இருப்போம். இதை என் அனு பவத்தின் வழி சொல்கிறேன் , " என்கிறார் காயத்ரி.

