விஜய் சேதுபதி நல்ல கதையம்சம் உள்ள கதைகளாகத் தேடித்தேடி நடித்துவருகிறார். இதனால் அவரது படங்கள் தயாரிப்பாளர்கள் கையைச் சுட்டுவிடாமல் ஓரளவு திருப்திகரமான லாபம் ஈட்டித் தருகின்றன. விஜய் சேதுபதி நடித்துள்ள 'சீதக் காதி' அவரது 25வது படமாக திரைக்கு வந்துள்ள நிலையில், இப்படம் குறித்தும் இவ்வாண்டு எப்படி அமைந்தது என்பது குறித்தும் விஜய் சேதுபதி தமது எண் ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். "இந்த ஆண்டு திருப்திகரமாகத் தான் அமைந்தது. ஆனால் பண ரீதியாக நான் மிகப்பெரிய பின்ன டைவைச் சந்தித்தேன். "96' படம் வெளியானபோது பண நெருக்கடியில் சிக்கி படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட, தயாரிப்பாள ருக்கு ரூ.4 கோடி கொடுத்துப் படத் தைத் திரைக்கு கொண்டுவரும் நிலை ஏற்பட்டது. இதுபோல் மேலும் சில பிரச் சினைகளில் பணத்தை இழக்கும் சூழ் நிலையில் அவதிப்பட நேர்ந்தது. "காரணங்கள் என்னவென்றே இன் னும் என்னால் ஒரு தெளிவான முடி வுக்கு வரமுடியவில்லை. இவ்வாறு கிட்டத்தட்ட ரூ.11 கோடியை இழந்துள் ளேன்," என்றார் விஜய் சேதுபதி.
'சீதக்காதி' காட்சியில் விஜய் சேதுபதி.

