'பாலியல் சீண்டலால் வீட்டிலேயே சிறைவாசம்'

'பாலியல் சீண்டலால் வீட்டிலேயே சிறைவாசம்'

2 mins read
24f1ff31-f147-4a65-8ed8-29ab89ee3a0e
-

திரைத்துறையில் காலடி வைத்தபோது பாலியல் தொந்தரவால் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வீட்டிலேயே சிறைவாசம் அனுபவித்தேன் என்றார் இயக்குநர் மணிரத்னத்தின் 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமான அதிதி ராவ். தொழில் இடத்திலும் வெளியிலும் தங்களுக்கு இருக்கும் பாலியல் தொந்தரவுகள் குறித்து 'மீ டூ' மூலம் வெளிப்படுத்தலாம் என்ற கலாசாரம் வேகமாக பரவியதும் சமூகத்தில் உயர்மட்டத்தில் இருக்கும் பெண்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் பற்றியும் பாலியல் தொந்தரவைப் பற்றி பகிரங்கமாக வெளிப்படுத்திய பிறகு அத னால் ஏற்படும் இடர்களைப் பற்றியும் வெளிப்படையாகக் கூறத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில், தனக் கேற்பட்ட பாலியல் சீண்டல் கள் குறித்து நடிகை அதிதி ராவும் 'மீ டூ'வில் பகிர்ந் திருந்தார். இப்போது அந்தச் சமயத்தில் தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அது பற்றி விளக்கமாகப் பேசினார். "திரைத் துறையில் துவக்க கா ல ங் க ளி ல் எனக்கும் பாலியல் சீண்டல்கள் அதிகமாக இருந்தன.

படத்தில் நடிக்கவேண்டும் என்றால் பாலியல் தொந்தரவுகளை சகித்துக் கொண்டு இருப்பதா இல்லை படமே வேண்டாம் என்று வீட்டிற்குள்ளேயே கிடப்பதா என்று எனக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்தனர். நான் அதுபோல் கீழ்த்தரமாக நடந்து கொண்டு படங்களில் நடிப்பதைவிட வீட்டிலேயே இருந்துவிடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். "திரைத்துறையினரின் எதிர் பார்ப்புக்கு இசையவில்லை என்றதும் எனக்குத் தண்டனை வழங்கினர். எனக்குக் கிடைத்த பட வாய்ப்புகள் பறிபோயின. அதனால் வீட்டிலேயே சிறைவாசம்போல் எட்டு மாதங்கள் முடங்கிக்கிடந்தேன். அதற்காக நான் பெரிதாக வருந்தவில்லை. அதற்குக் காரணம் என்னுடைய முடிவு சரி என்று என்னைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கூறி எனக்குப் பக்க பலமாக இருந்தனர். "இந்த விஷயத்தில் பெண்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தொழில் இடங்களில் உங்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து நீங்கள் அமைதியாக இருந்துவிட்டால் அந்த பாலியல் சீண்டல்களை ஆதரிப்பதுபோல் ஆகிவிடும். உங்கள் செயல் பாலியல் தொந்தரவு கொடுப் பவர்களுக்கு ஆதரவாகிவிடும். குறைந்தபட்சம் உங்களின் நிலைக் குறித்து பெற்றோர், நண்பர்களிடம் மனம் திறந்து சொல்லுங்கள்," என்று அதிதி ராவ் பேசினார்.