தமிழ்ச் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராகிவிட்டார் யோகி பாபு. ஒரே நேரத்தில் விஜய், அஜித் இருவருடனும் நடித்துக் கொண்டிருக்கிறார். அது பற்றி கூறும்போது "இவங்க இரண்டு பேருமே எனக்கு ஒன்றுதான். பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டு பேரிடமும் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. நான் வளரும் நடிகர். ஆனால் இரண்டு பேருமே என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு உட்கார வைத்து அழகுப் பார்க்கிறார்கள். "விஜய் சார்கூட நடிக்கும்போது நான் அவரைக் கிண்டல் செய்து ஏதாவது வசனம் பேசினால் அதை மனதார ஏற்றுக்கொண்டு சிரிக்கிறார்.
'விஸ்வாசம்' படத்தில் அஜித் சாருடன் நடிக்கும்போதும் அவரைக் கலாய்த்து ஒரு வசனம். பேசுவதற்கு முன்னால் அவரிடம் 'அண்ணே... பேசட்டுமா?'ன்னு தயங்கிக்கேட்டேன். "அதற்கு 'என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க? இது உங்க வேலை. பேசுங்க' என்று சொன்னார். இப்படிப் பேசியதாலேயே எனக்குத் தயக்கம் போய், தைரியம் வந்தது" என்று பெருமையாகக் கூறினார் யோகி பாபு.