அசுரனாக மாறிய தனுஷ்

அசுரனாக மாறிய தனுஷ்

1 mins read
b7b91221-aaa9-4cd3-a9a1-a234e0935693
-

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு 'அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் சுவரொட்டியை படக்குழு நேற்று வெளியிட்டது. 'வி கிரியேஷன்ஸ்' சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள், கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் 'மாரி 2' படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதவிர ராம்குமார், மாரி செல்வராஜ், துரை செந்தில்குமார் இயக்கத்தில் தலா ஒரு படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் 'வடசென்னை' இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும் தனுஷ் ஒரு படத்தை இயக்கி, நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.