ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'மாரி 2' படத்தின் வசூல் கடந்த இரு தினங்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.6 கோடி வரையில் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் படத்தின் வசூல் கோடி கோடியாகக் குவிந்தாலும் 'மாரி' முதல் பாகத்தைப் போன்று 'மாரி 2'ஆம் பாக படக்காட்சிகள் ஈர்க்கவில்லை என்றும் ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தயாரிப்பாளர், இயக்குநர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என்று பலதரப்பட்ட திறன்களுடன் வலம் வருகிறார். 'மாரி 2' படத்தில் தனுஷின் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் நடிக்கவுள்ளார்.
பணம் கோடியில் குவிந்தாலும் 'மாரி' போல் இல்லை 'மாரி 2'
1 mins read
-

