வரும் காதலர் தினத்தில் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் 'வர்மா' படமும் ஜி.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே நடித் துள்ள '100 விழுக்காடு காதல்' படமும் மல்லுக்கு நின்று வெற்றிகாண இப் போதே தயாராகி வருகின்றன.
ஜி.வி.பிரகாஷுடன் ஷாலினி பாண்டே நடித்துள்ள '100 விழுக்காடு காதல்' படம் தெலுங்கில் வெளியான '100 விழுக்காடு காதல்' படத்தின் மறு பதிப்பு. தென்னிந்தியத் திரையுலகம் முழுவதிலும் கவனத்தை ஈர்த்த இந்தப் படத்தை சந்திரமௌலி இயக்கியுள்ளார்.
துருவ் விக்ரம் நாயகனாக அறிமுக மாக, பாலா இயக்கும் வர்மா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாலா, "படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும், துருவ் சிறந்த நடிகனாக வருவார், விக்ரம் அளவுக்குத் தனக்குத் துருவ் கஷ்டம் கொடுக்கவில்லை," என்று கிண்டலாகக் கூறியிருந்தார்.
தேவாரகொண்டாவிடம் இருந்த கோபக்கார இளைஞன் தோற்றம் துருவ் வுக்கு பொருந்தவில்லை என்றும் துருவ் பார்ப்பதற்கு மாணவன் போல உள்ள தாகவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங் களில் கிண்டலடித்து வருகின்றனர்.
'வர்மா' காட்சியில் துருவ், மேகா செளத்ரி.

