எஸ்.ஏ. சந்திரசேகர்: காப்புரிமை கோரும் இளையராஜாவின் கருத்து ஏற்புடையதல்ல

எஸ்.ஏ. சந்திரசேகர்: காப்புரிமை கோரும் இளையராஜாவின் கருத்து ஏற்புடையதல்ல

2 mins read
d39b1d0a-3585-4c08-9f4b-779b33b5c5b5
-

படங்களுக்கு சம்பளம் பெற்றுக் கொண்டு இசையமைத்த இளைய ராஜா அந்தப் பாடல்களுக்குக் காப்புரிமை கேட்பது ஏற்புடையது அல்ல என்று இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். "திரைப்படப் பாடல்களுக்குப் பணம் பெற்றுக்கொண்டு இசை அமைப்பதால் பாடல் வெளியான தும் அது தயாரிப்பாளருக்குச் சொந்தமானதாகிவிடும்," என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்துத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர் களிடம் கூறுகையில், "இளைய ராஜா தான் பாடிய பாடல்களுக்கு காப்புரிமை கேட்பது ஏற்புடைய தல்ல. தயாரிப்பாளர்களுக்கே பாடல்கள் உரிமை சொந்தமானது.

"பொறியியலாளர், கட்டட மேற்பார்வையாளர், கொத்தனார், கையாள், தச்சு வேலை செய்பவர், சாயம் அடிப்பவர் எனப் பலரும் சேர்ந்து ஒரு வீட்டை உருவாக்கி னாலும் வேலை முடிந்தவுடன் அந்த வீடு உரிமையாளருக்குச் சொந்தமாகும். இது எல்லா தொழி லுக்கும் பொருந்தும்.

"படம் தயாரிப்பது கடினமான தொழில். வீட்டை விற்று, நிலத்தை விற்று, அவமானங்களைச் சந் தித்து படங்களைத் தயாரிக்கிறார் கள். இதில் துரதிர்ஷ்டம் என்ன வென்றால் அதிக படங்கள் தோல்வி அடைந்துவிடுகின்றன. "அத்தனை இன்னல்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்குத் தான் இந்த பாடல்களின் உரிமை சென்றடைய வேண்டும். "படத்தில் பணிபுரியும் இயக்கு நர், ஒளிப்பதிவாளர், சண்டை, கலை இயக்குநர், நடிகர், நடிகை கள் எல்லோரும் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்கின்றனர்.

இவர்கள் யாருமே காப்புரிமை கேட்பதில்லை. அதுபோலவே இசையமைப்பாளரும் காப்புரிமை கேட்பது கூடாது, அது தவறு. "அவருடைய வேலைக்கு என்ன சம்பளமோ அதை வாங்கி விடுகிறார். அப்படி இருக்கும்போது அப்பாடல் தயாரானவுடன் அது தொடர்பான அனைத்து உரிமை களும் தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும்," என்று கூறியுள்ள எஸ்.ஏ. சந்திர சேகர், இளையராஜாவுக்கு எதிராக வழக்குப் போட்ட தயாரிப் பாளர்களை பாராட்டி உள்ளார். "இந்த விஷயத்தில், தயாரிப் பாளர்களின் கோரிக்கை நியாய மானது. எல்லா தயாரிப்பாளர் களும் இப்பிரச்சினையில் ஒன் றிணைந்து நியாயம் கிடைக்க போராடவேண்டும்," என அவர் வலியுறுத்தி உள்ளார்.