சிம்புவை சுற்றும் புது சர்ச்சை

சிம்புவை சுற்றும் புது சர்ச்சை

1 mins read
d92a13d0-2cfb-40dc-be99-e226451ae7f2
-

சிம்பு தன் போக்கை மாற்றிக் கொண்டாலும் பொறுப்பாகச் செயல் பட்டாலும்கூட பிரச்சினைகள் அவரை விடுவதாக இல்லை. தற்போது அவரை மையப்படுத்தி புது சர்ச்சை வெடித்துள்ளது. அவரால் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீளமுடியவில்லை என புகார் எழுப்பியுள்ளார் தயாரிப்பாளர் தேனப் பன். சிம்பு நடித்த 'மன்மதன்', 'வல்ல வன்' ஆகிய இரு படங்களின் மறு பதிப்பு, மொழிபதிப்பு உரிமை அவரது தந்தை டி. ராஜேந்தரிடம் உள்ளதாம். ஆனால் அவற்றை விற்பதற்கு தயாரிப்பாளர் தேனப்பன் முட்டுக் கட்டை போடுகிறாராம். இதுகுறித்து ராஜேந்தர் போலிசில் புகார் அளித் துள்ள நிலையில் தனது தரப்பு விளக் கத்தை அளித்துள்ளார் தேனப்பன். மேற்குறிப்பிட்ட இரு படங்களின் இந்தி மற்றும் வட இந்திய உரிமை தனது நிறுவனத்துக்குச் சொந்தமா னது என்பது இவரது வாதம். இவற்றை வேறொரு நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளாராம்.

"சிம்புவை 'வல்லவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்தேன். அவரது ஒத்துழையாமை யால் பொருட்செலவு இருமடங்காகி கடும் நஷ்டம் ஏற்பட்டது. அதிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. "சிம்புவால் எத்தனையோ தயாரிப் பாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது, எல்லாவற்றையும் இழந்து தவிப்பது, ஒட்டுமொத்த திரையுலகத்துக்கே தெரியும். இந்நிலையில் என்னையும், 35 ஆண்டு கால எனது திரையுலக அனுபவத்தையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் பேசிவரும் டி. ராஜேந்தர் மீது மானநஷ்ட வழக்கு தொடுப்பேன்," என்கிறார் தேனப்பன்.