'நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்'

'நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்'

1 mins read
e2d8b090-b632-4ed6-ab9c-708d895c124a
-

'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத் துக்குத் தயாராகி வருகிறார் ஜெயம் ரவி. இப்படத்துக்கான பணிகளைச் சத்தமின்றி துவங்கியுள்ளாராம் இயக்குநர் ஜெயம் ராஜா. 'அடங்க மறு' படத்துக்கு ரசிகர்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக வெளி யான தகவல் ரவியை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தனது உடல் எடையை 18 கிலோ அளவுக்குக் குறைத்துள் ளாராம். இதற்காக கடந்த சில வாரங்களாக உடற்பயிற்சிக் கூடத்திலேயே தவம் கிடந் துள்ளார். காஜல் அகர்வா லுடன் நடிக்கும் புதுப் படத்தில் 12ஆம் வகுப்பு மாணவராக நடிக்கிறார் ரவி. அதற்காகத்தான் இந்த மெனக்கெடல். 2018ஆம் ஆண்டு தனிப்பட்ட வகையில் தனக்கு மிகவும் நல்ல ஆண்டு என்கிறார் ரவி. காரணம், நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக் கின்றனவாம். குடும்பத்துடன் 17 நாட்கள் சுற்றுலா சென்று வந்திருக்கிறார். மற்ற அனைத்தையும் விட இது தான் மிகப்பெரிய நல்ல விஷயம் என்று சொல்லும்போது ரவியின் முகத்தில் உற்சாகம் பீறிடுகிறது.