வேதிகா என்றொரு நடிகை இருந்தது இளையர்கள் சிலருக்கு மறந்திருக்கலாம். கடந்த இரு ஆண்டுகளாக அவரைக் கோடம்பாக்க வட்டாரங்களில் காண முடிவதில்லை. இந்த நிலையில் தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த சுற்றை வெற்றிகரமாகத் துவங்கியுள்ளார் வேதிகா. ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'காஞ்சனா-3', பிரபுதேவா தயாரிக்கும் புதுப்படம் என ஒரே சமயத்தில் தமிழில் நான்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளாராம். இறகுப்பந்து வீராங்கனையான வேதிகாவுக்கு இப்போது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் பிறந்திருக்கிறது. தினமும் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபடுகிறாராம். "இன்று நாம் அனுபவிக்கும் வலியும் வேதனையும்தான் நாளை நம்மை தெம்பாக உணர வைக்கும். இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும். "தமிழில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி தமிழில் அதிகம் நடிப்பேன்," என்று உற்சாகமாகவும் தத்துவார்த்தமாகவும் பேசி மனம் கவர்கிறார் வேதிகா.
மீண்டும் தமிழுக்கு வரும் வேதிகா
1 mins read
-

