எதிர்மறைக் கதாபாத்திரத்தில் காஜல்

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் காஜல்

1 mins read
2ddc997e-4186-4a8a-b0b0-c4c0edf579a0
-

படங்களில் நல்ல நாயகியாக நடித்து அலுத்துப்போனதால் எதிர்மறை வேடத்தில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் காஜல் அகர்வால். தேஜா இயக்கும் தெலுங்கு படம் ஒன்றில் காஜல் 'பணம் பணம்' என்று அலையும் பேராசைக்காரியாக நடித்து வருகிறார். தேஜாவின் படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் பணத்தாசைக் கொண்ட எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறாராம் காஜல். காஜலின் திரை வாழ்க்கையில் அவர் இதுபோன்ற வேடத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எளிதில் ஏமாறும் அப்பாவி பெண்ணாகத்தான் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

"ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து அலுத்துப் போய்விட்டது. வித்தியாசமாக நடிக்க விரும்புகிறேன்," என்று காஜல் தெரிவித்த நிலையில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. நல்லவளாகவே நடித்து வரும் காஜலை வேண்டும் என்றே இப்படி ஒரு வேடத்தில் நடிக்க வைக்கிறார்களாம். அவர் தனது கதாபாத்திரத்தை புதுமையாக கொண்டு வருவார் என்று நம்புகிறார்கள். அவர் இதுவரை நடித்து முடித்துள்ள காட்சிகளைப் பார்த்து இ ய க் கு ந ரு ம் தயாரிப்பாளரும் திருப்தி அடைந்துள்ளார்களாம். 'இந்தியன் 2' படத்தில் நடிக்க உள்ளார் காஜல். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் மூலம் தனது திரை வாழ்க்கை யில் அடுத்த கட்டத் திற்கு சென் றுள்ளதாக கூறுகிறார் காஜல்.