விஜய் சேதுபதி: திருநங்கையாக மனப்பூர்வமாக விரும்பி நடித்தேன்

விஜய் சேதுபதி: திருநங்கையாக மனப்பூர்வமாக விரும்பி நடித்தேன்

2 mins read
023ba4f2-aaec-477e-86a3-b4bbdaf02434
-

'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நான் விரும்பித் தான் நடித்தேன் என்றார் 'சீதக்காதி' நாயகன் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றி நடைபோடும் 'சீதக்காதி' படத் தைப் பற்றி கூறுகையில், "நான் 'ஐயா' கதாபாத்திரத்திற்கு தயாரா னவுடனேயே என் மனைவி குழந்தைகளை அழைத்து, 'எல்லாரும் தயாராகி வாங்க. குடும்ப படம் எடுத்துக் கொள்வோம்' என்று கூப்பிட்டேன். ஏனென்றால், தன்னுடைய அப்பா வயதானவராக இருக்கும்போது படம் எடுக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும் என்று தெரியாது.

"என்னைப் பார்த்தவுடனே 'சூப்பரா இருக்குப்பா' என்று குழந்தைகள் மகிழ்ச்சியடைந் தார்கள்" என்று தன் குடும்பத் தினர் அடைந்த சந்தோஷத்தை பகிர்ந்தபடி பேசத் தொடங்கினார் விஜய் சேதுபதி.

"சீதக்காதி' படம் கலைக்கு சமர்ப்பணம். அது எந்தக் கலையாக இருந்தாலும் சரி. 'ஐயா' கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டேன். படமாகப் பார்த்தவுடன் ஓரளவு செய்து இருக்கிறேன் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. ஒரு நடிகனாக நம்பிக்கை சற்று அதிகமாகி இருக்கிறது. "திருநங்கையாக 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டீர்கள் என்று கேட்கிறார்கள். 'சூப்பர் டீலக்ஸ்' கதையை என்னிடம் தியாகராஜன் குமாரராஜா சொன்னவுடன் நடிக்கிறேன் என்று சொல்லிட்டேன். ஆனால், நீங்கள் ஹீரோ, மெதுவாக யோசித்து பிறகு சொல்லுங்கள் என்றார். எப்போது கேட்டாலும் நான் நடிக்கிறேன். இதில் நான் இருக்கணும். அவ்வளவுதான் என்றேன். திருநங்கையாக ஒருவர் மாறுவது சாபம் கிடையாது. இந்தச் சமூகம் அதைச் சாபமாக பார்க்கிறது. திருநங்கையாக நடிப்பதற்கு நான் போய் யாரையும் சந்திக்கவில்லை. நான் திருநங்கையாக மனப்பூர்வ மாக விரும்பி அந்தப் படத்தில் நடித்தேன்.