இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை வைக் கின்றனர். அந்த வகையில் 'என் காதலி சீன் போடுறா' என்ற தலைப்பில் புதுப்படம் ஒன்று உருவாகி உள்ளது. 'அங்காடித் தெரு' மகேஷ், சாலு இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ஜோசப் பேபி தயாரிக்க, ராம்சேவா இயக்கியுள்ளார்.
ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப் படையாகக் கொண்டு, நகைச்சுவை கலந்த படைப்பாக இப்படம் உருவாகி உள்ளதாம். கவலைகளை மறந்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனும் கருத்தை வலி யுறுத்துகிறார்களாம். இது அனைத்துத் தரப்பினருக்குமான படம் என்கிறார் இயக்குநர் ராம்சேவா.
"இந்த உலகில் வாழும் ஒவ் வொருவரும் வாழ்நாளின் இறுதிவரை மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நாம் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். "சற்றே அஜாக்கிரதையாக இருந்தா லும்கூட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவை நம் வாழ்க்கையை ஒட்டுமொத்த மாக மாற்றியமைத்துவிடும். இந்தக் கருத்தையும் உள்ளடக்கி இப்படத்தை உருவாக்கி உள்ளோம்," என்கிறார் ராம்சேவா.
படம் முழுவதும் நகைச்சுவை சற்றே தூக்கலாக இருக்குமாம். அதேசமயம் வணிக ரீதியிலான அம்சங்களும் இடம்பெற்றிருக்குமாம். மனோபாலா இடம்பெறும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் என்று உத்தரவாதம் அளிக்கும் ராம் சேவா, ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் 23 நாட்களில் முடித்துள்ளார்.
'என் காதலி சீன் போடுறா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

