சசிகலா வேடத்தில் நடிக்க வாய்ப்பு

சசிகலா வேடத்தில் நடிக்க வாய்ப்பு

1 mins read
63544505-592e-4b35-9258-ce4a4e04b535
-

'மாரி 2' படத்தை அடுத்து மேலும் சில தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளாராம் சாய் பல்லவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படமும் அதில் ஒன்று என்று கூறப்படுகிறது. 'த அயர்ன் லேடி' என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைப் படமாக்குகிறார் இயக்குநர் பிரியதர்‌ஷினி. இதில் வித்யா பாலன் நாயகியாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியானது. ஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன் நடிப்பது உறுதியான நிலையில், சசிகலா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியை நடிக்கவைக்க விரும்புகிறாராம் இயக்குநர் பிரியதர்‌ஷினி. இதையடுத்து அவரைச் சந்தித்துப் பேசி படத்தின் திரைக்கதையை விவரித்துள்ளாராம். சாய்பல்லவி கால்‌ஷீட் ஒதுக்கிய கையோடு அவரும் இப்படத்துக்காக ஒப்பந்தமாகியுள்ளது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தகவல். 2018-12-29 06:10:00 +0800