கீர்த்தி சுரேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் என்னுடைய கணவர் இவர்களைப்போல் இருக்க வேண்டும் என்று இரண்டு நடிகர்களைக் குறிப்பிட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களை திகைப்பில் ஆழ்த்தி இருக்கிறார். 'பைரவா', 'சர்கார்' உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜய்யுடன் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், குறுகிய காலத்தில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் வசூலிலும் சாதனை படைத்ததால் அவருக்குத் தொடர்ச்சி யாக பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் புத்தாண்டில் ஒளிபரப்பு வதற்காக தனியார் தொலைக்காட்சி ஒன்று நடிகைகள் சரோஜா தேவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சில படங் களை வரிசையாக வைத்து அதில் யாரைப் பிடிக்கும்? இதில் இருப்பவர்களில் யார் மாதிரி உங்கள் கணவர் இருக்க வேண்டும் என்றெல்லாம் கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பினர். நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம் உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்று இருந்தன. இப்படியொரு கேள்விக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவார் என்ற எண்ணத்தில்தான் கேள்வி கேட்கப் பட்டது. ஆனால் கொஞ்சமும் தயங்காத கீர்த்தி, "இதில் இடம் பெற்றிருக்கும் எல்லோரையுமே எனக்குப் பிடிக்கும். ஆனால் அவர்களில் எனக்கு விஜய் போலவும் விக்ரம் போலவும் கணவர் வரவேண்டும்," எனப் பளிச் சென்று பதில் சொன்னார் . அதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தி கை த் து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

