விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் இல்லை: ரசிகர்கள் வருத்தம்

'பேட்ட' படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று முன்தினம் வெளியானது. அதைப் பார்த்த பெரும் பாலான ரசிகர்களின் மனதில் எழும் கேள்வி விஜய் சேதுபதியைப் பற்றியதுதான். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக ரஜினி இருந்தாலும் தற்போதைய சூழலில் மக்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதி. 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற செய்தி வெளியான திலிருந்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் சொன்னபடி விஜய் சேதுபதிக்கு இந்தப் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் முன்னோட் டக் காட்சியைப் பார்த்த ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

முன்னோட்டக் காட்சி முழுவதும் ரஜினியே ஆக்கிரமித்திருந்தாலும் விஜய் சேதுபதிக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. மேலும் முன்னோட்டக் காட்சி யில் நடிகர்களின் பெயர்களில் முதலில் ரஜினியின் பெயர் வருகிறது. அதைத் தொடர்ந்து சிம்ரன், திரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நாவாசுதீன் சித்திக்கி ஆகியோரின் பெயர்கள் வருகின் றன. அதற்குப் பிறகுதான் இறுதியாக விஜய் சேதுபதியின் பெயர் வருகிறது. ஒருவேளை முக்கியமான கதாபாத்திரத்தின் பெயரைக் கடைசியில் போடுவதுதான் நியாயம் என இயக்குநர் நினைத்திருக்கலாம். நாவாசுதீன் சித்திக்கி பேசும் ஒரு வசனத்தை வைத்துப் பார்க்கும்போது, அவரிடம் அடியாளாக இருக்கும் ஜித்துதான் விஜய் சேதுபதி எனத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!