சினிமாவைக் காதலிக்கும் சாய் பல்லவி

சினிமாவைக் காதலிக்கும் சாய் பல்லவி

1 mins read
d8fe8546-c0d6-40dd-8425-5f3dd057336b
-

திருமணம் செய்துகொள்ளாமல் ஒருவருடன் இணைந்து வாழ்வதில் தமக்கு அறவே விருப்பம் இல்லை என்கிறார் சாய் பல்லவி. அதற்காக 'லிவிங் டுகெதர்' என்ற கோட்பாட்டை தாம் எதிர்க்கவில்லை என்றும் அப்படி வாழ்வது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புவதாகச் சொல்லும் சாய் பல்லவி, தற்போது தமிழில் சூர்யாவுடன் 'என்ஜிகே' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பகத் பாசிலுடன் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க உள்ளாராம்.

"நான் காதலித்திருக்கிறேனா என்று கேட்கிறார்கள். எனது கல்லூரி நாட்களில் புத்தகங்களைக் காதலித்தேன். தற்போது சினிமாவைக் காதலித்துக்கொண்டிருக்கிறேன்," என்றார்.