2018ன் வெற்றிப்பட நாயகி கீர்த்தி சுரேஷ்

2018ன் வெற்றிப்பட நாயகி கீர்த்தி சுரேஷ்

1 mins read
2c75ab6b-c7d6-449d-86da-acabe2069207
-

2018ஆம் ஆண்டில் அதிகப் படங்களில் நடித்து அவை அனைத்தும் வெற்றிப்படங்கள் என்ற வகையில் முன்னணி நாயகியான நயன்தாராவை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் சென்ற ஆண்டு மொத்தம் ஆறு படங்களில் நடித்திருந்தார். 'தானா சேர்ந்த கூட்டம்', 'நடிகையர் திலகம்', 'சர்கார்', 'சாமி ஸ்கொயர்', 'சண்டக்கோழி 2', 'சீமராஜா' ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஐந்து படங்களில் கதாநாயகியாகவும் 'சீமராஜா' படத்தில் மட்டும் கௌரவ வேடத்திலும் நடித்திருந் தார். இவருக்கு அடுத்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். இவர் 'லட்சுமி', 'வட சென்னை', 'செக்க சிவந்த வானம்', 'கனா' ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் 'சாமி ஸ்கொயர்' படத்தில் கௌரவ வேடத்திலும் நடித்திருந்தார். வரலட்சுமி 'மிஸ்டர் சந்திர மவுலி', 'சர்கார்', 'சண்டக்கோழி 2', 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', 'மாரி 2' ஆகிய படங்களில் வில்லி, குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.