நடிகரும் நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் விரைவில் அரசியல்வாதியாக மாறவிருப்பவருமான விஷால் 40 வயதைத் தாண்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டடம் கட்டி முடித்தவுடன் திருமணம் என்று கூறி வந்த விஷால், தற்போது நடிகர் சங்கக் கட்டடத்தின் பணிகள் முடிவடையவுள்ள நிலையில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அதனால் அவரின் தந்தை அவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து இருக்கிறார். விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் பெண்ணின் பெயர் அனிஷா என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வரும் ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தமும் விரைவில் திருமணமும் நடைபெறும் என்றும் விஷால் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. அதற்காக விஷால் குடும்பத்தினருடன் ஹைதராபாத் செல்ல இருக்கிறார்.

