'காதல் கண் கட்டுதே' படம் மூலம் அறிமுகமான அதுல்யா ரவிக்கு 'நாடோடிகள் 2', 'அடுத்த சாட்டை' என்று வரி சையாக படங் கள் வர உள்ளன. வளர்ந்து வரும் நடிகையான அதுல்யா, தன் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். "தாய்மை உணர்வு பெண் ணுக்கே உரியது என்பதுபோல தன்னை நம்பிவரும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஆண்களிடத்தில் மேலோங்கி இருப்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். "இந்தக் குணாதிசயத்தைத் தான் ஆணுக்கான அடையாள மாக வும் நான் நினைக்கிறேன்.
"மற்றபடி 'சிக்ஸ்பேக்' வைத்துக்கொள்வதும் சாகசங் கள் புரிவதும் மட்டுமே ஆண்மை யின் அடை யாளங்கள் என்று நினைத்துக்கொள்பவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். "காதலியோ, மனைவியோ... யாராக இருந்தாலும் அவர் களுக்கான சுதந்திரத்தைத் தட்டிப்பறிக்காத ஆண்தான் நல்ல ஆண் மகன். "அவனே மனைவிக்கு நல்ல துணையாக இருக்க முடி யும்," என்று உறுதியாக நம்புகி றேன். "ஏனெனில், பெண்ணின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொள்வதும் அவளது மனம் வெறுக்காத வகையில் நடந்து கொள்வதும்தானே உண்மையான ஆண்மை. "அப்படிப்பட்ட ஒருவர்தான் எனக்குத் துணையாக வேண் டும்," என்று கூறி இருக்கிறார்.

