வசனகர்த்தாவான யோகி பாபு

வசனகர்த்தாவான யோகி பாபு

2 mins read
91d14033-094c-4a40-9512-c0f5ac6190d9
-

யோகி பாபு சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, படிப்படியாக வளர்ந்து நகைச்சுவை நடிகர் ஆனார். இன்றைக்கு அவர் நடிக்காத படங்களே இல்லை என்னும் அளவிற்கு மும்முரமாக நடித்து வருகிறார். 'கூர்கா', 'ஜோம்பி', 'தர்மபிரபு' ஆகிய 3 படங்களில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் முத்துக்குமரன் இயக்கும் 'தர்மபிரபு' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூசையுடன் துவங்கியது.

'தர்மபிரபு' படத்தின் படப்பிடிப்புத் துவங்கும் முன் யோகி பாபு, தயாரிப்பாளர் ரங்கநாதன், முத்துக் குமரன் ஆகியோர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள எமதர்ம ராஜா கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை நடத்தினர். அதைத் தொடர்ந்து வல்லக்கோட்டை முருகன் கோயி லுக்குச் சென்று வழிபட்டனர்.

எமதர்ம ராஜாவின் தெய்வீகத் தன்மையை உறுதிப்படுத்த படப் பிடிப்புத் தளத்தில் அசைவ உணவு சமைக்கவும் பரிமாறவும் கூடாது என்று முடிவு செய்துள்ளனர். இந்த ஆன்மீக செயல் முறை, படம் வெற்றி பெற நேர்மறையான சூழ்நிலை யை அமைத்துக் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.

இப்படத்திற்காக ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமான எமலோக அரங்கம் ஒன்று சென்னையில் புகழ்பெற்ற 'ஸ்டூடியோ'வில் அமைக்கப்பட்டுள்ளது.

கதைப்படி எமனின் மகன் யோகிபாபு. எமனுக்கு அடுத்த பதவியில் இருக்கிறவர் ரமேஷ் திலக். ஒரு நாள் எமன் இறந்துவிட, அடுத்த எமன் பதவிக்குச் சட்டப்படி ரமேஷ் திலக் வரவேண்டும். ஆனால் வாரிசு அடிப்படையில் யோகி பாபு வரவேண்டும். எமன் பதவியைப் பிடிக்க இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்தான் படத்தின் கதை.

பொதுவாக யோகி பாபு நடிக்கும் படங்களில் அனைவரையும் சிரிக்க வைக்கும் வசனங்களை யோகி பாபு அந்த நேரத்தில் அவருக்கு மனதில் தோன்றிய வசனத்தைப் பேசியவைதான். அதைக் கவனித்த 'தர்மபிரபு' படத்தின் இயக்குநர் முத்துக்குமரன் இந்தப் படத்தில் யோகி பாபு பேசும் வசனங்கள் அனைத்தையும் அவரையே எழுதச் சொல்லிவிட்டார். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தற்போதைய அரசியல், சினிமா இரண் டையும் கலந்துகட்டி நையாண்டி செய்து வசனத்தை எழுதியிருக்கிறாராம் வசன கர்த்தாவாக அவதாரம் எடுத்த யோகி பாபு.