2018ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் 'டாப் 10' படங்கள் எனப் பலரும் பல்வேறு விதமான பட்டியல் களை வெளியிட்டார்கள். அதில் பெரும்பாலும் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் இடம் பெறவில்லை. அதனால் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தாறுமாறாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படம் இந்தியில் வெளிவந்த 'ஸ்பெஷல் 26' படத்தின் மறுபதிப்பு ஆகும்.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 'சொடக்கு மேல' பாடல் 'டாப் 10' பாடல்களில் இடம் பெற்றாலும் 'டாப் 10' படங்களின் பட்டியலில் இந்தப் படம் இடம் பெறவில்லை என்பதில் விக்னேஷ் சிவன் கோபமாக இருக்கிறார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நயன்தாராவுடன் அமெரிக்கா சென்றிருந்த விக்னேஷ் சிவன், 2018ன் சிறந்த படங்களின் பட்டியல்களில் 'தானா சேர்ந்த கூட்டம்' இடம்பெறாததால் கோபத்துடன் டுவிட்டரில் கெட்ட வார்த்தையுடன் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். "தானா சேர்ந்த கூட்டம்' படத்தை ஜாலியாக உருவாக்கினோம்.
திரையரங்குகளில் மக்கள் கொண்டாடியதே எங்களுக்குப் போதும். வசூல், விமர்சனம், கருத்து போன்ற வைகளில் எங்கள் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தேர்வு செய்தவர்களுக்கு ரசனை இல்லை," என்று கடும் கோபத்துடன் பதி விட் டுள்ளா ர். அவருடைய பதிவைப் பார்த்த சூர்யா ரசிகர்களே "தானா சேர்ந்த கூட்டம்' அப்படி ஒன்றும் சிறந்த படம் இல்லை. ஒரு பாடலைத் தவிர படத்தில் எதுவுமே சரியில்லை. தோல்வி வந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்," என்று அவருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

