மனிஷா: புற்றுநோய் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது

"எனது மோசமான வாழ்க்கை முறையால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன்," என்று நடிகை மனிஷா கொய்ராலா வருத்தத்துடன் கூறியுள்ளார். மனிஷா கொய்ராலா 1990களில் தமிழ், இந்தி திரைகளைக் கலக்கியவர். மணிரத்னத்தின் 'பம்பாய்', ஷங்கரின் 'இந்தியன்' படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில ஆண்டுகளுக்கு முன்பு கர்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின், முழு நம்பிக்கையுடன் புற்று நோயுடன் போராடி மீண்டு வந்துள்ளார்.

தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததை 'ஹீல்டு' என்ற பெயரில் சுயசரிதைப் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "புற்றுநோய் என் வாழ்வில் அதிக தைரியத்தைக் கொடுத்துள்ளது. என்னு டைய தவறான வாழ்க்கை முறையால் நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். "நான் பல இருட்டான நாட்களையும் தனியான இரவுகளையும் கடந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என் காலடியில்தான் உலகமே இருப்பதாகக் கருதினேன். இடைவிடாத தொடர் படப் பிடிப்புகளால் 1999ஆம் ஆண்டு உடல் அளவிலும் மனதளவிலும் அதிகம் பாதிக்கப்ப ட்டேன்.

அதிலிருந்து மீள்வதற்கு மது மட்டுமே எனக்குச் சிறந்த வழியாக இருந்தது. என் நண்பர்கள் நிறைய அறிவுரை கூறியும் நான் அதைக் கேட்கவில்லை. "புற்றுநோய் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே இப்போது நினைக்கிறேன். புற்றுநோயால் என் சிந்தனை கூர்மையானது. என் மனம் தெளிவானது. என் கண்ணோட்டம் மாறியது. "முன்பெல்லாம் அதிக கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் இப்போது அதிலிருந்து மீண்டு, முற்றிலும் அமைதியாக மாறி விட்டேன்," என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!