நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'ஐரா' படத்தின் முன்னோட்டக் காட்சி வரும் சனிக்கிழமை வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நயன்தாரா வெவ்வேறு முக பாவனைகளைக் காட்டும் முதல் சுவரொட்டி வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. நயன்தாரா இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங் களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஒரு வேடத்தில் யாரும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு கறுப்பு நிற பெண்ணாக நடித்து படக்குழுவை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
"நயன்தாரா மேடத்துடன் பணிபுரிவது தயாரிப்பாளருக்கு ஒரு மென்மையான அனுபவம். ஒவ்வொரு படத்திலும் பல்வேறு கதாபாத்திரங்களை பரிசோதனை செய்து பார்க்கும் அவரது திறமையைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் நடிப்பு எங்கள் முந்தைய படமான 'அறம்' படத்திலிருந்து 'ஐரா'வில் இன்னும் அதிகரித்து இருக்கிறது என்பது எங்களின் தனிப்பட்ட கருத்து. "ஒரே நேரத்தில் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் 'ஐரா'விற்கு அவர் தந்த முக்கியத்துவம் சிறப்பானது. உண்மையில் அவரின் இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரத் துக்கு கடும் உழைப்பு தேவைப்பட்டது. அதை அவர் சிறப்பாகச் செய்தார்.

