'மீ டூ' விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்ததையடுத்து பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜியை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஒரு பெண்ணாகவும், முன்னணி நடிகையாகவும் இருப்பவர் பெண்க ளுக்குச் சாதகமாக கருத்து தெரிவிக் காதது வருத்தம் அளிப்பதாக அவர் கள் கூறியுள்ளனர். அண்மைக் காலமாக 'மீ டூ' குறித்த விவாதம் பரவலாக நடை பெற்று வருகிறது. பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்க ளுக்கு கடும் தண்டனைகள் அளிக் கப்பட வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது. நடிகைகள் தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா, அலியாபட் ஆகியோர் 'மீ டூ'வுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், பாலியல் தொல்லை கொடுப்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், ராணி முகர்ஜியோ, பாலியல் விவகாரம் தொடர்பில் ஆண்கள் மாறுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்.
"ஆண்கள் மாற மாட்டார்கள். பெண்கள்தான் மாற வேண்டும். பெண்கள்தான் தங்களைப் பாது காத்துக்கொள்ள வேண்டும். இதற் காக அவர்கள் தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்வது அவசியம்," என்கிறார் ராணி முகர்ஜி. இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் அவ ரைக் கண்டித்துப் பேசி வருகிறார்கள். "பாலியல் தொல்லை கொடுப்பவனுக்கும் தற்காப்பு கலை தெரிந்து இருந்தால் என்ன செய்வது? என்று சமூக வலைத்தளங்களில் ராணிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

