இளம் இயக்குநருடன் மீண்டும் இணைய ரஜினி முடிவு

இளம் இயக்குநருடன் மீண்டும் இணைய ரஜினி முடிவு

1 mins read
bb3a9f17-ad2d-4642-996d-c545a0f11b6b
-

மீண்டும் இயக்குநர் கார்த்திக் சுப்பு ராஜுடன் இணைய உள்ளார் ரஜினி. அவரது நடிப்பில் கார்த்திக் இயக்­கத்தில் உருவான 'பேட்ட' படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளி­யீடு காண உள்ளது. இதில் பழைய, இளமையான ரஜினியை பார்க்க முடியும் என அவ ரது ரசிகர்கள் ஆவலுடன் காத்தி ருக்­கி­றார்கள். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை உருவாக்கிய விதம் ரஜினியை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். இதையடுத்தே, மீண்டும் அவரது இயக்கத்தில் நடிப்பது என முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. முருகதாஸ் இயக்கத்தில் நடித்த பிறகு கார்த்திக் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகத் தகவல்.