'மார்க்கெட் ராஜா' வேடத்தில் ஆரவ்

'மார்க்கெட் ராஜா' வேடத்தில் ஆரவ்

1 mins read
adef4926-7f7d-4d8a-b1e0-b011caf8c57b
-
Google News Preferred Icon

சரண் இயக்கத்தில் 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' என்ற படத்தில் நடிக்க உள்ளார் 'பிக்பாஸ்' புகழ் ஆரவ். தற்போது 'ராஜ பீமா'வில் நடித்துக் கொண்டிருப்பவர், மேலும் இரு புதுப்படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல். இந்நிலையில் தனது இயக்கத்தில் கமல் நடித்த 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தை நினைவுகூரும் விதமாக புதுப்படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளார் சரண். இதில் மார்க்கெட் ராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆரவ். அவரது ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ‌ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிமோன் கே.கிங் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் சரணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆரவ் தம்மைக் காதலிப்பதாக வெளியான தகவலை ஓவியா மீண்டும் மறுத்துள்ளார். இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதால் இப்படியொரு கிசுகிசு பரவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.