மீண்டும் ஒரு பயணக் கதையில் நடிக்கிறார் கார்த்தி. அவர் நடிக்கும் 17ஆவது படம் 'தேவ்'. அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் கைவண்ணத்தில் உருவாகிறது. இது முழு நீள அதிரடி, அடிதடி படமாக இருக்குமாம். ரகுல் பிரீத்சிங் நாயகியாகவும் பிரகாஷ்ராஜ், வம்சி கிருஷ்ணா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். 50 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். எனினும் அச்சமயம் வேறு சில படங்கள் வெளியீட்டிற்குப் போட்டியிட்டன. எனவே போட்டியிலிருந்து விலக நேர்ந்தது. இந்நிலையில், இம்மாத இறுதியில் இப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.
கார்த்தி நடிப்பில் ரூ.50 கோடி செலவில் உருவாகியுள்ளது 'தேவ்'
1 mins read
-

